சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ; ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!!

20 November 2020, 7:31 pm
Quick Share

தயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கடந்த வருடத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளது. அதில் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஒன்று.

நேரடியாக ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியான இத்திரைப்படம் பார்க்கும் ஒவ்வொரு முறைக்கும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் (pay per view) வெளியானது. இந்நிலையில் இதே பாணியை தான் அடுத்து தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கும் செய்ய தயாரிப்பாளர் கொடப்பாடி ஜெ ராஜேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது திரைப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதை சிவகார்த்திகேயன் விரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் திரையரங்கில் ரிலீஸ் செய்த இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கட்டணம் செலுத்தி ஓடிடி தளங்களில் பார்க்கும் வண்ணம் டாக்டர் திரைப்படம் வெளியாகவிருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

தியேட்டரில் வெளியான பிறகு திரைப்படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஓடிடி தளத்திற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரியவருகிறது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பதாலும் அவர் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதாலும் ஓடிடி தளத்தில் இத்திரைப்படத்தினை ஒரு முறை பார்ப்பதற்கு 200 முதல் 250 ரூபாய் வரை வசூல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0