பாலியல் வழக்கில் சிக்கிய ராப் பாடகர் வேடன்! திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார்…
Author: Prasad31 July 2025, 10:30 am
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், ஜாதிய ஏற்றத்தாழ்வு, சமூக பிரச்சனை ஆகியவற்றை குறித்து பல பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் இவர் மீது பல எதிர்ப்புகளும் கிளம்பின.
சில மாதங்களுக்கு முன்பு கூட கஞ்சா பயன்படுத்தியதாக வேடன் கைது செய்யப்பட்டார். ஆனால் அதன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டாலரில் புலிப்பல் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வனத்துறை அவரை கைது செய்தது. இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு பெயர் போன வேடன் மீது, தற்போது கொச்சியை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி வாக்குறுதி அளித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வேடன் மீது திருக்காக்கரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
