கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

Author: Selvan
3 March 2025, 1:00 pm

100 கோடியை தொட்ட டிராகன்

கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு ஹிட் ஆகி வசூலை அள்ளி வருகிறது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இரண்டாவது படம் இதுவாகும்.

இதையும் படியுங்க: ஹோட்டல மாத்துங்க.. கறாராக சொன்ன அஜித்.. அதிர்ச்சியில் கோலிவுட்!

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா மற்றும் கையேடு லோஹர் நடித்திருப்பார்கள்,அதுமட்டுமில்லாமல் மிஸ்கின், சித்து,கவுதம் வாசுதேவ்மேனன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து அசத்திருப்பார்கள்.

Ashwath Marimuthu Direction

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நாளுக்கு நாள் திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,இப்படம் வெளியான முதல் வாரமே உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்,இந்த நிலையில் படம் வெளியாகி 9 நாட்களில் 100 கோடி வசூலை அடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் வரக்கூடிய நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!