போதைப் பொருள் வழக்கு : ரியாவின் வாக்குமூலத்தினால் சிக்கும் பிரபல ‘தமிழ் நடிகை’..!

12 September 2020, 12:05 pm
ria chakravarthi - updatenews360
Quick Share

போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல தமிழ் நடிகை உள்பட இரு நடிகைகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு விசாரணையில், போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகக் கூறி, ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருக்கும் ரியா சக்ரபோர்த்தியிடம், சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்தும் மற்றும் கொள்முதல் செய்யும் பிரபலங்களின் பட்டியலை கேட்டுள்ளனர். அப்போது, நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என சுமார் 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை ரியா கூறியுள்ளார்.

ரியாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சில பாலிவுட் பிரபலங்களை விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதால், போதைப் பொருளை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதோடு, பாலிவுட் நடிகை சாரா அலிகான் மற்றும் பேஷன் டிசைனர் சிம்மோன் கம்பட்டா ஆகியோரும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளனர்.

Views: - 1

0

0