நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா படத்தின் இயக்குநர்கள் அறிவிப்பு…

Author: Mari
5 January 2022, 4:10 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் தான் ராகவா லாரன்ஸ். இவருடைய இயக்கி நடித்த வெளியான காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது ருத்ரன், அதிகாரம், போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், ‘துர்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக ட்விட்டரில் நடிகர் லாரன்ஸ் உறுதி செய்துள்ளார்.

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ’24’, ‘கைதி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஸ்டன்ட் இயக்குனர்களாக இவர்கள் பணியாற்றியுள்ளனர். கே.ஜி.எப்’ படத்துக்காக சிறந்த ஸ்டன்ட் இயக்குனர்களுக்கான தேசிய விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்து வருது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘துர்கா’ படம் மூலம் அன்பறிவ் இயக்குநர்களாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Views: - 477

0

0