ECRல் ரூ.3 கோடியில் பங்களா, ரோல்ஸ் ராய்ஸ் கார் : 4 படத்துல தலையை காட்டிய பிரபல நடிகைக்கு அடிச்சது ஜாக்பாட்?

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 1:31 pm

சினிமாவை பொறுத்தவை காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது தான் பழமொழி. சான்ஸ் கிடைக்கும் வரை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்படி பல நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் சம்பாதித்துள்ளனர்.

அந்த வகையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க ஆர்மபித்து பின் அதன்மூலம் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.

மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரியா பவானி சங்கர் 3 கோடிக்கு ECR-ல் பங்களா வாங்கி காதலருடன் குடியேறியதாக செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றாற் போல பிரியா பவானி சங்கர் ECR பகுதியில் வீட்டு வாங்கியதாக காதலருடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்தார்.

உடனே நெட்டிசன்கள், 4 படத்துல நடிச்சதுக்கே எப்படி இவ்ளோ சம்பாதிச்சீங்க என வாயை பிளந்தனர்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் பற்றிய பல வதந்தி செய்திகள் பரவியதை கேட்டு பதிலளித்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பித்துள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பிரமோஷனுக்காக பேட்டியொன்றில், தொகுப்பாளர் தங்களை பற்றிய செய்திகளை பற்றி சிரித்திருக்கிறார்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரியா பவானி, நிறைய இருக்கிறது. நான் இதை சொன்னே அதை சொன்னேன்னு எழுதுனாங்க.

மேலும், 3 கோடிக்கு ECRல் பங்களா வாங்கினீர்களா என கேட்டதற்கு, 3 கோடிக்கு ECRல் பங்களா வாங்க முடியாது. வீடு வாங்குனது உண்மை தான்.

வீடு வாங்கி சென்றோம் அவ்வளவு தான். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினா என்ன தப்பு. அது ஏன் அவ்வளவு தப்பா பேசுறாங்க. எழுத எழுத வாங்குவோம் என்று காமெடியாக கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!