சென்னையில் பிரபல நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. கணவர் கைது?

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2025, 1:09 pm

சென்னையில் பிரபல நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவது திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்க: ரயில் வரும் போது தூங்கிய கேட் கீப்பர் பங்கஜ்… இது 5வது முறை.. வாக்குமூலத்தில் அதிர்ச்சி!

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அருணா. கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமான அவர், விஜயகாந்த், கார்த்திக், சிவாஜியின் முதல் மரியாதை உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார்.

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட அருணா, பெரும்பாலும் 2ஆம் கதாநாயகி, துணை நடிகையாக வலம் வந்தார். அருணாவின் கணவர் மோகன் குப்தா.

ED raids famous Tamil actress's house.. Film industry shocked!

இவர் வீட்டின் உட்கட்டமைப்புகளில் அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையல் மோகன் குப்தா நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ டிரைவ் பகுதியில் வசித்து வரும் அருணா வீட்டில் இன்று காலை 4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply