கங்கனாவுக்கு பளார்னு அறைவிட்டு கன்னத்தை பழுக்க வைத்த போலீஸ்.. கை ரேகை பதிவாகிருக்கு.. பரவும் போட்டோ..!

Author: Vignesh
7 June 2024, 7:20 am

பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில், சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். இதற்காக, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

kangana ranaut

மேலும் படிக்க: விலை உயர்ந்த செருப்பு வாங்க ஆசைப்பட்ட அனிகா : அதுக்குனு இப்படியா இறங்குவீங்க? ரசிகர்கள் விமர்சனம்!

முன்னதாக, கங்கனா ரணாவத்தை தாக்கியது தொடர்பாக பெண் காவலர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண் காவலரின் கை ரேகை கங்கனாவின் கன்னத்தில் பதிந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?