அந்த விஷயத்தில் நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டாங்க .. எமோஷனலாக பேசிய ஓவியா..!

Author: Vignesh
10 July 2024, 11:58 am

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு, ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும், ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை யாரேனும் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்களா? என கேட்டதற்கு… ஆம், நிறையபேர் பண்ணியிருக்காங்க…. நம்ம ரொம்ப உண்மையா இருப்போம் அதையே சில அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு ஏமாத்திட்டு போய்டுவாங்க அப்படி என் வாழ்கையில் நிறையே பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.

oviya - updatenews360 f

பின்னர், படவாய்ப்புகளுக்காக படுக்கைகைக்கு அழைப்பது குறித்து கேட்டதற்கு, அது ரொம்ப தப்பான விஷயம்… இது ஜஸ்ட் சினிமா… உங்களுடைய தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னு அவசியம் இல்லை. அப்படியான விஷயங்களை வெளியில் தைரியகமாக சொல்லவேண்டும். அப்படி நடிப்பதற்கு சும்மாவே இருக்கலாம். இந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது என்பதை கேட்கவே வெட்கமாக இருக்கிறது என அவர் கூறினார். மேலும் பண விஷயத்திலும் சிலர் ஏமாற்றியதாக அவர் கூறி இருக்கிறார். அதனால் ஓவியாவை ஏமாற்றியது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!