“என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” – வெளியானது நெஞ்சம் மறப்பதில்லை செம ரகளையான பாடல்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

4 March 2021, 7:12 pm
Quick Share

புதுப்பேட்டை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த செல்வராகவன், எப்பொழுதுமே காலம் தாழ்த்தியே கொண்டாடப்படுகிறார். இதை தாமதமாக புரிந்து கொண்ட ரசிகர்கள் சமீபகாலமாக இவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இவரின் சமீபத்திய படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே வருகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பே பட வேலைகள் முடிந்து வெளியாவதற்கு தயாராக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் படம் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் பிரச்சனைகள் முடிந்து நாளை திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல் இன்னொரு அப்டேட் அவர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் அதைக் கேட்டு கேட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் வரும் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. எஸ் ஜே சூர்யா வின் ரியாக்சன், டான்ஸ் என செம ரகளையாக இருக்கிறது. செல்வா மற்றும் யுவன் ரசிகர்கள் இந்த பாடல் வெளியிட்டால் கை கால் புரியாமல் ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் மவுசு குறையல, செல்வா சார்….

Views: - 376

2

0