தோ வந்துடும்.. தோ வந்துடும்னு சொன்னாங்க.. என்ஜாய் எஞ்சாமி பாடலின் வருமானம்..- பிரபலம் ஆதங்கம்..! (வீடியோ)

Author: Vignesh
5 March 2024, 6:57 pm

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான என்ஜாய் என்ஜாமி பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தரப்பில் வெளியானது. இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதில், சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் தெருக்குறள் அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.

மிகப் பெரிய ஹிட்டான அந்த பாடல் தொடர்பாக ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே பல்வேறு சர்ச்சைகள் ஒரு வருடத்துக்கு முன்பே வெடித்திருந்தது. இப்பாடலை, எழுதி கம்போஸ் செய்து பாடியது நான் யாரும் எனக்கு மெட்டு தரவில்லை என அறிவு கூற அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே இருந்த பிரச்சினை வெளியே தெரிய வந்தது.

enjoy enjaami

இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி படல் குறித்து தற்போது, சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மியூசிக் நிறுவனம் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்க்கப்பட்ட பாடலுக்கு ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு ரூபாய் கூட இதுவரை வரவில்லை என வருத்துடன் தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!