துரத்திட்டு வந்து எவ்வளோ Rateன்னு கேட்டாங்க – மோசமான அனுபவத்தை கூறிய எதிர்நீச்சல் காயத்ரி!

Author: Shree
20 October 2023, 4:21 pm

சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. ஆனால், குறிப்பாக நடிகைகள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், நடிகைகள் பேட்டியில் கலந்து கொண்டால் போதுவாக கேட்கப்படும் கேள்வி அட்ஜெஸ்ட்மெண்ட் உங்களுக்கு நடந்து இருக்கா என்ற கேள்வி அனைத்து நடிகைகளின் பேட்டிகளிலும், முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு சீரியல் நடிகையிடன் இந்த கேள்வி கேட்கப்பட்டதால் சரமாரியாக சாடி இருக்கிறார். அதாவது அயலி மற்றும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் தான் அது.

நடிகை காயத்ரி கிருஷ்ணனின் சமீபத்திய பேட்டியொன்றில் தன்னிடம் கேட்கப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்து இருக்கிறார். அதில், என்னை துரத்தி வந்து எவ்வளோ Rateன்னு கேட்டு அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்தார்கள் என எதிர்நீச்சல் காயத்ரி பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!