எதிர்நீச்சல் சீரியல் நாயகியை தட்டி தூக்கிய பிரபல சேனல்… ஷாக் ஆன சன் டிவி!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 12:42 pm

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி இடையே டிஆர்பியில் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படியுங்க: லக்கா மாட்டிக்கிச்சு.. லக்கா மாட்டிக்கிச்சு : அனிகா சுரேந்திரன் Photos!

அண்மையில் கூட விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகை சன் டிவிக்கு தாவி உள்ள செய்தியை நமது தளத்தில் பார்த்தோம்.

விஜய் டிவி சீரியலில் எதிர்நீச்சல் ஜனனி!

தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஜனனி, விஜய் டிவிக்கு தாவியுள்ளார். எதிர்நீச்சல் 2 சீரியல் தயாராகி வரும் நிலையில், அதில் தான் நடிக்கவில்லை என ஜனனி உறுதி செய்திருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அய்யனார் துணை என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது குறித்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?