சர்வர் சுந்தரத்தில் கூட்டத்தில் “ஒருவராக”: இன்று நகைச்சுவையின் “அரசராக”

Author: Sudha
3 July 2024, 2:06 pm

மற்ற நடிகர்கள் பேசுவதற்கு தயங்கும் சமூக விஷயங்களையும் அரசியல் கோட்பாடுகளையும் தன்னுடைய காமெடி மூலமாக மக்களுக்கு புரியும் வண்ணம் மிக எளிதாக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

இவர் உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

இயற்பெயர் சுப்பிரமணியன், இவரது பெயரை கவுண்டமணி என மாற்றியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் கவுண்டமணி.

750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. 12 படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.கவுண்டமணி செந்தில் காமெடி இணை எல்லோராலும் ரசிக்கப்பட்டது செந்திலுடன் சேர்ந்து கரகாட்டக்காரன் படத்தில் இவர் செய்த வாழைப்பழ காமெடி உலகப்பிரசித்தம். சில திரைப்படங்களில் வில்லனாகவும் அசத்தியிருப்பார் கவுண்டமணி.

ஓஷோவின் தத்துவங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி ஓசோவின் தத்துவங்களை மேற்கோள் காட்டி பேசுவது இவர் வழக்கம். எனவே பார்த்தல் காமெடியன் படித்த அறிவாளி என இவரைப் பற்றி இவருடன் நடிக்கும் சக நடிகர்கள் குறிப்பிடுவதுண்டு.

கவுண்டமணி முதலில் அறிமுகமான திரைப்படம் ராமன் எத்தனை ராமனடி ஆனால் அதற்கு முன்பாகவே சில படங்களில் கூட்டத்தில் தோன்றியிருப்பார் கவுண்டமணி.

சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக நின்ற கவுண்டமணி இன்று நகைச்சுவை ராஜாங்கத்தின் மன்னனாகத் திகழ்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!