அன்னைக்கு அஜித்.. இன்னைக்கு விஜய்யா…? பிரபல நடிகர்களின் வீட்டை குறிவைக்கும் பிரபல நடிகை ; இனி ஒரே ஜமாய்தான்!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 12:47 pm

பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு படத்துடன் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும், வசூலில் வாரிசு படம் பட்டைய கிளப்பி விட்டதே என்றே சொல்லலாம். இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் அப்டேட் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது நீலாங்கரையில் வசித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் சைக்கிளில் சென்று ஓட்டுப்போட்ட நிகழ்வினால், அவரது வீடு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

இந்நிலையில், விஜய்யின் வீட்டின் அருகே ரூ. 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீட்டை வாங்கியுள்ளாராம் நடிகை திரிஷா. ஏற்கனவே அஜித் வீட்டின் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருந்த திரிஷா, தற்போது புதிதாக வீடு ஒன்றை விஜய் வீட்டின் அருகே வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த தளபதி 67 படத்தின் பூஜையில் கூட திரிஷா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?