“உங்க அப்பா 18 சீன் மாத்திருப்பாரு.. நீங்க 18 சீன் மாத்துவீங்க..” – கதை கேட்ட விஜய்யை பங்கம் செய்த இயக்குனர் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
24 May 2023, 12:35 pm

தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக பணியாற்றி வந்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தமிழ் திரையுலகில் விளங்கி வரும் இவர், பல இளம் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரைட்.

இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர், அவர் இயக்கிய யூத் படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். பின்னர், சிறு பட்ஜெட்டில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தை இயக்கினார். முதல் படமே பெரும் வெற்றியை பெற்ற நிலையில், இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய அஞ்சாதே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதன் நடுவே, சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றினார். தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மிஸ்கின், நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

mysskin - updatenews360

அதில் அவர் பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது 6 மாதம் விஜயிடம் நான் பேசவில்லை. 6 மாதம் கழித்து என் பின் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என கேட்டார். அதற்கு நான் உங்களை ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன். அதன் பின்னர், சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன்.

அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என கூறவே, விஜய் என் கழுத்தை பிடித்து லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார். அதற்கு நான், உங்க அப்பா 18 சீன் மாத்திருப்பாரு, நீங்க18 சீன் மாத்திருப்பீங்க. நான் தற்கொலையே பண்ணி இருப்பேன். அதனால் தான் வேண்டாம் என்று நினைத்தேன் என கூறியுள்ளார். மேலும், கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த கதை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இன்னும் 2 3 வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்’ என்று பேசி இருக்கிறார். மேலும், லியோ பட படப்பிடிப்பு தளத்தில் விஜய், தன்னை நன்றாக கவனித்து கொண்டதாகவும், 20 வருடங்கள் ஆகியும், விஜய் மாறாமல் இருப்பது சந்தோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!