பசியால் துடித்த ரோபோ ஷங்கர்…கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்..
Author: Selvan11 November 2024, 8:35 pm
நடிகர் ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவில் தன்னுடைய சொந்த திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி, காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
இவர் சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் ரொம்ப சிரமத்துக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு,திரும்ப தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.சமீபத்தில் இவருடைய மகளின் திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
கன்னத்தில் அறைந்த விஷால்
அதில் நடிகர் விஷால் ஒரு தடவை நான் சாப்பிட்டு இருக்கும் போது கன்னத்தில் ஓங்கி அடித்து, உங்களுக்கு ஷூட்டிங் இருக்குதுனு தெரிஞ்சும் சாப்பிட போயிருக்கீங்க,சாப்பாடு அவ்ளோ முக்கியமா உங்களுக்குனு கேட்டார்.முதலில் நடிக்குற வேலைய பாருங்கனு கத்தினார்.
இந்த நிகழ்வை அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதன்முதலில் வந்த புதுமுக நடிகை பார்த்து சார் எனக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடுங்க நான் ஊர்க்கு போற, விஷால் சார் ரொம்ப கோவக்காரங்களா இருக்காங்க ரோபோ ஷங்கர் சாரையே அடிச்சுட்டாங்கனு பயத்துல பதறி போய் இயக்குனரிடம் சொன்னார்.
பின்பு தான் அவுங்களுக்கு புரிய வைத்தோம்,அது நடிகையை பயமுறுத்த பிராங்க்காக பண்ணது என்று,இருந்தாலும் நடிகர் விஷால் உண்மையிலே ஓங்கி அடித்துவிட்டார்னு கலகலப்பாக அந்த நிகழ்ச்சியில் சொல்லி இருப்பார் நடிகர் ரோபோ ஷங்கர்.