ஷூட்டிங்கில் அடிக்க பாய்ந்த தனுஷ்: பிரபல நடிகர் பகிர்ந்த ஷாக் சம்பவம்..!

Author: Rajesh
12 February 2023, 12:00 pm

வினியோகஸ்தராக திரையுலகில் அடியெடுத்து வைத்த தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராக பட்டைய கிளப்பியவர் நடிகர் ராஜ்கிரண். ராமராஜனை வைத்து சில படங்களை தயாரித்த இவர், ராமராஜனை வைத்து தயாரிக்க நினைத்த திரைப்படம் ‘ராசாவின் மனசிலே’. இப்படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கினார். இதுதான் கஸ்தூரி ராஜாவுக்கு முதல் திரைப்படம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ராஜ்கிரண்.

dhanush-updatenews360-1

சில பல காரணங்களால் ராமராஜன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக ராஜ்கிரணே நடித்தார். இப்படத்தின் வெற்றி அவரை நடிகராகவே மாற்றிவிட்டது. அதன்பின் பல ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தன் அப்பாவுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த காரணத்தினால் தனுஷுக்கு ராஜ்கிரண் மீது எப்போதும் நல்ல மரியாதை உண்டு.

எனவே, அவர் முதன்முதலாக இயக்கிய ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் ராஜ்கிரணையே கதாநாயகனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஜ்கிரணை மிக அன்பாக தனுஷ் கவனித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் ராஜ்கிரண் பேசியபோது, “இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்றது. ஒரு காட்சிக்கு பின் அடுத்த காட்சிக்கு இடையே ஓய்வு கூட கொடுக்காமல் என்னை அழைத்து நடிக்க வைத்தனர்.

rajkiran-updatenews360

ஒரு காட்சி முடிந்து நான் சிகரெட்டை பற்றவைத்த உடனே அடுத்த காட்சியில் நடிக்க அழைப்பார்கள். எனவே, சிகரெட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடுவேன். இதைப்பார்த்து கோபப்பட்ட தனுஷ், ‘ஐயா’வ சிகரெட் கூட பிடிக்க விட மாட்டீங்களா?’ என படக்குழுவினரை திட்டினார். அதேபோல், ஒரு அறையில் படப்பிடிப்பு நடந்த போது, எதிர்பாராமல் படக்குழுவினர் ஒருவர் என்னை மோதியதைப்பார்த்து கோபமடைந்த தனுஷ் அவரை அடிக்க பாய்ந்தார்” என ராஜ்கிரண் கூறினார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 664

    1

    0