தளபதி 69 படத்தில் இருந்து பிரபலம் திடீர் நீக்கம்… அரசியல் காரணமா? விஜய் மறைமுக உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2024, 4:55 pm

தளபதி விஜய் சினிமா உலகில் உச்ச நடிகராக உள்ளார். விஜய் தற்போது அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். மேலும் தனது கடைசி படம் என தளபதி 69வது படத்தை அறிவித்துள்ளார்.

தளபதி 69ல் இருந்து சிவராஜ்குமார் நீக்கம்

ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், யோகி பாபு என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கடைசியாக இணைந்தவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் ஜெயிலர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: என்னை விட்டுருங்க… உஷாரான அஜித் : அதிர்ச்சியில் பிரபல இயக்குநர்!!

இதனால் தளபதி 69வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் திடீரென படத்தில் இருந்து சிவராஜ்குமார் நீக்கப்பட்டுள்ளார்.

Shiva Rajkumar Removed From Thalapathy 69

ஹெச் வினோத் என்னை தொடர்பு கொண்டு, இந்த படத்தில் நீங்கள் துரதிருஷ்டவசமாக இல்லை, எதிர்காலத்தல் இணைந்து படம் செய்வோம் என கூறியுள்ளார்.

இடையில் என்ன நடந்தது? திடீரென வாய்ப்பை திரும்ப பெற்றுக்கொள்ள காரணம் என்ன என்பது தெரியவில்லை என அவரே கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!