பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனை செல்லும் போது உயிர் பிரிந்த சோகம் : தமிழ் திரையுலகம் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2025, 10:28 am
நடிகர், தொழிலதிபர், ஜோதிரடாக அறியப்பட்ட நடிகர் ராஜேஷ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நடிகர் ராஜேஷ், பாலச்சந்மதர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்த கன்னிப் பருவத்திலே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தொடர்ந்து அந்த 7 நாட்கள் படத்தில் இவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தினார்.
சினிமாவில் வென்றது போல பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார். யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுடன் நேர்காணல் செய்து பல தகவல்களை பரிமாறி வந்தார்.
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை பூர்விகமாக கொண்ட ராஜேஷ்க்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து அதிலும் வெற்றி கண்ட ராஜேஷ், தொழிலதிபராகவும் வலம் வந்தார்.

இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் மரணத்தை அறிந்த தமிழ் திரையுலகம் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.