சிறுமியை வைத்து பாலியல் தொழில்..? பிரபல நடிகை கைது : திரையுலகம் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 4:09 pm
கேரள திரையுலகை தன் புயல் கரங்களால் ஆட்டிப்படைத்தது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த ஆண்டு வெளியான இந்த அறிக்கை, பல நடிகைகளின் பாலியல் புகார்களால் திரையுலகை தரை தட்டியது.
இதில் மையப் புள்ளியாக விளங்கியவர், சர்ச்சை நடிகை மினு முனீர். அவரது புகார்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அலைகளை உருவாக்க, இன்று அவர் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மினு முனீர், கேரள சினிமாவின் பிரபல நடிகர்களான முகேஷ், மணியன்பிள்ள ராஜூ, இடவேல பாபு, ஜெயசூர்யா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த புகார்கள் திரையுலகில் பெரும் புயலை கிளப்பின. மறுபுறம், தயாரிப்பாளரும் நடிகருமான பாலச்சந்திர மேனன் மீது, தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்தியதாக மினு கூறிய புகாரில் அவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இப்படி, பாலியல் புகார்கள், வழக்குகள், நீதிமன்றங்கள் என மினு முனீரின் பயணம் சர்ச்சைகளால் நிரம்பியது.

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மினு முனீரை கைது செய்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினரின் 14 வயது சிறுமியை “சினிமாவில் நடிக்க வைப்பதாக” கூறி சென்னைக்கு அழைத்து வந்தார் மினு. அந்த சிறுமியை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தபோது, நான்கு பேர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
விடுதியில் இருந்து தப்பித்த அந்த சிறுமி, தற்போது மினு முனீர் மீது புகார் அளித்ததை அடுத்து, திருமங்கலம் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
