இந்தியாவில் முதன்முறையாக விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகை.. விலையை கேட்டா தலையே சுத்திடும்!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2025, 10:59 am

சினிமாவில் பிரபலமாகும் நடிகர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த காரை பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் சினிமாவில் உள்ளவர்களக்கு சகஜம் தானே என்று நாம் கடந்து போய்விடுவோம்.

ஆனால் அதுவே ஒரு நடிகை என்றால் ஆச்சரியம்தான். ஏனென்றால் பெரும்பாலான நடிகைகள் விலை உயர்ந்த காரை பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் விசித்திரமாக உள்ளது இந்த செய்தி.

இதையும் படியுங்க: இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!

இந்தியாவில் முதன்முறையாக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார் பிரபல நடிகை ஊர்வசி ரவுதாலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், தமிழில் நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரிப்பில், நாயகனாக நடித்த தி லெஜண்ட் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

ஊர்வசி ரவுதாலாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், நடிகைகள் யாருமே இதுவரை வாங்காத, ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார்.

Urvashi Rautala New Rolls Royce Car

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை ₹12 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இந்த காரின் வீடியோவை சமூக வலைதளம் மூலம் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!