நா வாய் திறந்த வடிவேலுவோட மானம் போய்டும்… உண்மையை உடைத்த சீரியல் நடிகை..!

Author: Vignesh
29 February 2024, 7:01 pm

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் வைகை புயல் வடிவேலு.

இதனிடையே, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவதற்கு முக்கிய காரணம் வடிவேலு நடிப்பு வராத நடிகர்கள், மற்றும் நடிகைகளையும் நடிக்க வைத்து தனது திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்டி விடுவாரார் என நடிகை பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

priyanka-updatenews360

நடிகை பிரியங்கா காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்த அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பேருந்தில் ஏறி அனைத்து பெண்களுக்கும் காதல் கடிதம் கொடுக்கும் காமெடி மக்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது என்றுதான் கூறப்படுகிறது.

priyanka-updatenews360

சினிமாவிற்காக நடிகை பிரியங்கா தனது நிஜமான பெயரை மாற்றி அமைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் சந்திரலேகா என இவர் தெரிவித்து உள்ளார். நடிகை பிரியங்கா மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேல் காவல்துறை அதிகாரியாக நடித்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஐந்து புருஷன் என ஒரு காமெடி வரும் அந்த காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தான் வரும்.

priyanka-updatenews360

மேலும், இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை பிரியங்கா தற்போது ஒரு சில திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை நடிகர் வடிவேலு சார் தான் பிரபலமாக்கி விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடிவேலுவை கண்டபடி திட்டி அவரது உண்மை முகத்தை உடைத்து வருகிறார்கள். ஒரு சிலரோ நா வாய் திறந்த வடிவேலுவோட மானம் போய்டும் என்று பகிரங்கமாக பேசி வருகிறார்கள். இதற்கு மத்தியில், வடிவேலுவால் தான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்றும், வடிவேலு சாருடன் நடித்ததால் தான் எனக்கு இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று நடிகை பிரியங்கா புகழந்து பேசி இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்தது குடும்பம், குழந்தை என்று இருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா. தற்போது, கணவருடன் விவாகரத்து செய்ய உள்ளதாகவும், தன் அம்மாவுக்கு புற்றுநோய் சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனால் பணம் தேவைப்படுகிறது என்பதால் தான் மீண்டும் நடிக்க சீரியல்களில் நடித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?