ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

Author: Prasad
16 June 2025, 6:57 pm

சின்மயி VS தீ

“தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தீ கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படவே இப்பாடலை ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடிய பாடகி சின்மயி அவ்விழாவில் அப்பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் பாடகி தீயின் குரலை விட சின்மயியின் குரல் ரம்மியமாக இருப்பதாக ரசிகர்கள் கருதினார்கள். அதனை தொடர்ந்து சின்மயி பாடிய வெர்ஷனை படத்தில் இணைக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் சின்மயி தமிழ் திரைப்படப் பாடல்களை பாட மறைமுகமாக தடை இருப்பதாக கூறப்படுகிறது. 

famous journalist criticize mani ratnam for muththa mazhai song

பாட்டே இல்லை…

“தக் லைஃப்” திரைப்படம் வெளிவந்த பிறகு தீ பாடிய “முத்த மழை” வெர்ஷனாவது படத்தில் இடம்பெறும் என ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசியில் முத்த மழை பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். 

எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க “முத்த மழை” படத்தின் வீடியோ பாடலை படக்குழுவினர் யூட்யூப்பில் வெளியிட்டனர். ஆனால் அதன் பின் “ஏன்தான் இந்த பாடலை வெளியிட்டார்கள்?” என்று ரசிகர்கள் புலம்பத்தொடங்கினார்கள். இப்பாடல் படமாக்கப்பட்ட  விதம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக தீயின் குரல் திரிஷாவுக்கு செட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. 

ஆடியன்ஸ் மேல பழி போடாதீங்க

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு  பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, “முத்த மழை பாடல் ஏன் படத்தில் வரவில்லை என்று கேட்டபோது மணிரத்னம், ‘முழு பாடலையும் கேட்கக்கூடிய பொறுமை ஆடியன்ஸுக்கு இல்லை’ என ஆடியன்ஸ் பக்கம் திருப்புகிறார். நீங்கள் இரண்டே முக்கால் மணி நேரம் ஒரு மொக்கை படத்தை கொடுக்குறீர்கள், ஒரு 5 நிமிடப் பாடலை வைத்தால் நாங்கள் ரசிக்க மாட்டோமா? 

famous journalist criticize mani ratnam for muththa mazhai song

எல்லோரும் இடைவேளையில்தான் பாப் கார்ன் வாங்குவார்கள். ஆனால் தக் லைஃப் படத்தை பொறுத்தவரை படம் தொடங்கிய 10 நிமிடங்களில் பாப் கார்னை தேடக்கூடிய சூழல் வந்துவிட்டது” என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!