இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறிய ரஜினி, விஜய்யின் பிரபல வில்லன் நடிகர் : குடும்பத்தோடு மதம் மாறிய போட்டோஸ் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 4:08 pm
Dheena - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் அவர் குடும்பத்தோடு வேறு மதத்திற்கு மாறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. அதன் பிறகு அவர் விஜய் நடித்த தெறி, பிகில், மெர்சல், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடித்த வடசென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் உள்பட பல படங்களில் வி ல் லன் வேடங்களில் நடித்தார்.

நடிப்பையும் தாண்டி சாய் தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதி ப்பினால் தனது வாழ்வாதாரத்தை இழ ந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.

மேலும் இவர் நடிகர் மட்டுமின்றி சமூக சேவை செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் தான் வி ல் லன் என்றாலும் நிஜத்தில் இவர் ஹீரோ என்று பல திரையுலக பிரபலங்கள் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புத்த பிக்கு ஒருவர் முன்னிலையில் அவர் புத்த மதத்துக்கு மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் சாய் தீனா புத்த மதத்திற்கு மாறியது குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 212

0

0