அம்மா கூட இருக்கும்போதே அதிதியிடம் அந்த வேலை பார்த்த நபர்.. போட்டுக்கொடுத்த சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
12 August 2023, 10:30 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

aditi shankar - updatenews360

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில், மாவீரன் படத்தின் ஆடியோ லான்ஜின் போது காமெடி நடிகர் ஒருவர் அதிதி சங்கருக்கு ரோஜா பூ கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார். உடனே சிவகார்த்திகேயன் தம்பி பக்கத்துல அதிதி மம்மி இருக்காங்க அப்படி என்று போட்டுக் கொடுத்துள்ளார். உடனே அந்த காமெடி நடிகர் அத்தை ஜி என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி நெடிஷன்கள் கலாய்த்து வருகின்றன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!