தல கிட்டயே வலிமை Update கேட்ட ரசிகர் – தல சொன்ன பதில் என்ன தெரியுமா ?

4 February 2021, 5:34 pm
Quick Share

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, புகழ், பவல் நவகீதன், கார்த்திகேய கும்மகோண்டா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. தொடர்ந்து தல ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து ஒவ்வொரு நடிகரிடமும் கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு கட்டத்தில் தமிழக முதல்வரிடமும் கூட கேட்டுள்ளனர். இந்த நிலையில், வலிமை படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தல அஜித்தே அவரது ரசிகரிடம் கூறியுள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித்தை, ரசிகர் ஒருவர் சந்தித்து பேசியதோடு, அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். 10 நிமிடம் அவரிடம் பேசியதாகவும், வலிமை அப்டேட் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு அஜித், சிரித்துக் கொண்டே பிப்ரவரி இறுதியில் அனைத்து அப்டேட்டுகளும் வரும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0