தோனி Fan-ஆ? இல்ல அஜித் Fan-ஆ? சொமேட்டோ டெலிவரி பாய் வீடியோவால் களேபரமான சோசியல் மீடியா! 

Author: Prasad
8 July 2025, 11:09 am

பெங்களூரில் ஒரு சொமேட்டோ டெலிவரி ஊழியரின் பையில் “Thala Fan” என்று பொறிக்கப்பட்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகும் நிலையில் தல என்றால் அஜித்தா? அல்லது தோனியா? என இணையத்தில் மோதல் எழுந்துள்ளது.

பட்டத்தை துறந்த அஜித்குமார்

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் அஜித்குமார், பல வருடங்களுக்கு முன்பு அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அல்டிமேட் ஸ்டார் என்ற தனது பட்டத்தை துறந்தார். மேலும் அவரை ரசிகர்கள் பலரும் தல என்று செல்லமாக அழைத்து வந்தனர். ஆனால் ஒரு  கட்டத்தில் “என்னை தல என்று அழைக்க வேண்டாம்” என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த சமயத்தில்தான் கிரிக்கெட் வீரர் தோனியை தல என்று அழைக்கத்தொடங்கினார்கள் தோனியின் ரசிகர்கள்.

fans argue that thala word belongs to dhoni or ajith

வாக்குவாதம்…

இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கும் தோனி ரசிகர்களுக்கும் இடையே முட்டிக்கொண்டது. “தல என்ற பட்டம் அஜித்திற்குரியது, அது வேறு யாருக்கும் உரியது அல்ல” என அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இதற்கு தோனி ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறு இருவரும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது உண்டு.

அந்த வகையில் பெங்களுரில் ஒரு சொமேட்டோ ஊழியரின் பையில், “Thala Fan delivering to Thali fan” என்று எழுதப்பட்டிருந்த வீடியோவை அஜித் ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “இது தமிழ்நாடு இல்லை, பெங்களூரில் ஒரு அஜித் Fan” என்று பெருமையோடு கூறியிருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவில் “தல என்றால் தோனி, அஜித் கிடையாது. அந்த டெலிவரி ஊழியர் தோனியின் ரசிகர்” என ஒரு தோனி ரசிகர் கருத்து தெரிவிக்க அப்பதிவின் கம்மெண்ட் பகுதி களேபரமாகி வருகிறது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • mansoor ali khan directing a full movie in sanskrit language மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?
  • Leave a Reply