போட்டியாளரின் கார் மீது தாக்குதல்.. பிக்பாஸ் பிரச்னையா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!

Author: Vignesh
18 December 2023, 2:30 pm

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் சிலர் பர்சனலாக எடுத்துக்கொண்டு தவறான முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில சமயங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற விஷயங்கள் நடப்பது தற்போது வாடிக்கையாக மாறிவிட்டது.

அந்த வகையில், ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில், பல்லவி பிரசாந்த் என்பவர் தான் டைட்டிலை வென்றார்.

அமிர்தீப் மற்றும் பல்லவி பிரசாந்த் இருவருக்கும் இடையே, தான் கடும் போட்டி நிலவியது. இதில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், வெற்றி பெற்ற பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பலரும் கூட்டமாக வந்து அமிர்தீப் காரை தாக்கியுள்ளனர்.

அவர் சென்று கொண்டிருந்த காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் பலரும் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?