பேஷ் பேஷ்… ராஷ்மிகாவின் நல்ல குணத்தை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்!

Author: Shree
23 March 2023, 5:23 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷ்மிகா விஷயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம், அவர் டெய்லி ரொட்டீன் குறித்து பேசிய ராஷ்மிகா, “எனக்கு சின்ன சின்ன விஷயங்களும் முக்கியம், அதுவும் எனக்கு அன்றைய நாளுக்கான மகிழ்ச்சியை கொடுக்கும். நான் காலையில் எழுந்ததும் என்னுடன் செல்ல பிராணிகள் உடன் நேரத்தை செலவிடுவேன். நண்பர்களை பார்ப்பேன். அது என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவும்.

மனிதனுக்கு “வார்த்தைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை. அதனால் தான் யாரவது எதாவது சொன்னால் எனக்கு வருத்தம் ஏற்படும். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நான் டைரியில் எழுதி வைப்பேன். நான் வீட்டில் இருந்தால் மரியாதைக்காக எல்லோர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்.

வீட்டில் வேலை செய்யும் ஆட்களிடம் கூட காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன். மனிதர்களை ஒருபோதும் நான் வேறுபடுத்தி பார்க்கமாட்டேன். இப்படி எல்லோரையும் மதிப்பவர் நான்” என ராஷ்மிகா கூறி இருக்கிறார். இதை கேட்டதும் ரசிகர்கள் சிலிர்த்துவிட்டார்கள். நீங்க உண்மையிலே ரொம்ப நல்ல பொண்ணு தான் ராஷ் குட்டி என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?