‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?

Author: Selvan
6 February 2025, 5:03 pm

அஜித்தை ‘தல’ என்று கூப்பிட ஆசை..ரசிகர் வைத்த கோரிக்கை

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க அதிகாலை முதலே தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.படத்தை பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை முதலில் கொடுத்து வந்தாலும்,தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

Ajith Kumar Vidamuyarchi fan celebrations

இந்த நிலையில் படத்தை பல பிரபலங்கள் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் ரசிகராக கண்டு களித்தனர்.நடிகை திரிஷா,நடிகர் ஆரவ்,இசையமைப்பாளர் அனிருத் உட்பட பல நட்சத்திரங்கள் உற்சாகமாக படத்தை பார்த்தனர்.இந்த நிலையில் அஜித் மேனஜரான சுரேஷ் சந்திரா ரோகினி திரையரங்கு சென்று படத்தை பார்க்க சென்றார்.

இதையும் படியுங்க: சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்.. விடாமுயற்சிக்கு விஜய் பட இயக்குநர் பாராட்டு மழை!

அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ராஜ மரியாதையை செலுத்தி வரவேற்றனர்.அப்போது அவரை சுற்றி வளைத்து ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்தனர்.அவரும் பொறுமையாக ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்தார்,அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் சார் அஜித்தை தலனு மட்டும் அழைத்துக்கிடுறோம்,அவரிடம் கொஞ்சோ பேசி அனுமதி வாங்குங்கள்,எங்களுக்கு அஜித்தை தல என்று கூப்பிடணும்னு ஆசை என கோரிக்கை வைத்தார்.

அதனை கேட்ட சுரேஷ் சந்திரா சிரித்துக்கொண்டே அங்கிருட்ந்து படம் பார்க்க உள்ளே சென்றார்.ஏற்கனவே அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய பெயருடன் சேர்த்து எனத ஒரு அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!