பணப்பெட்டியை எடுத்திருப்பேன் – பாலாஜி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

15 January 2021, 2:15 pm
Quick Share

பிக் பாஸ் சீசன் 4 இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. வெளிய போன ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கெஸ்ட்களாக மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆறு போட்டியாளர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கார்டன் ஏரியாவில் குறிப்பிட்டளவு பணத்தை ஒரு பண பெட்டியில் வைத்து , இந்தப் போட்டியில் வெற்றி பெற மாட்டோம் என சிறிது தோன்றினாலும் போட்டியாளர் அந்தப் பெட்டியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

ஆனால் அதை யார் எடுப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டிருந்த நிலையில் பாலாஜி கேமரா முன்பாக வந்து நின்று, “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த பணப் பெட்டியை இரண்டு வாரங்களுக்கு முன்னால் வைத்திருந்தால், மறு யோசனையின்றி அதை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பேன். ஆனால் என்னை நம்பி பல பேர் எனக்காக ஓட்டு போட்டுள்ளனர். அவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் இரண்டாவது விஷயம். ஆனால் என்னை நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்” என்று கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் பாலாஜி முன்ன போல இல்லப்பா திருந்திட்டார் என கரிசனம் கட்டி வருகிறார்கள்

Views: - 7

0

0