ரூ.10க்கு கார் தொடச்சேன்…இப்போ காரே வாங்கிட்டேன்: புகழ் பெருமிதம்!

1 March 2021, 8:47 pm
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான புகழ் சொந்தமாக கார் வாங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சிரிப்புடா என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அறியப்பட்டவர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு தன்னை ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், மிமிக்கிரி ஆர்டிஸ்டாகவும் நிரூபித்துக் கொண்டார். இவ்வளவு ஏன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் புகழ் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.

Cooku With Comali நிகழ்ச்சியின் முதல் சீசனில் குக்காக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மற்றும் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் இருவரது கெமிஸ்டரி இன்றும் பேசப்பட்டு வருகிறது. Cooku With Comali முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, Cooku With Comali நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி, கனி, தர்ஷா குப்தா, சகீலா ஆகியோருடன் புகழ் செய்து வரும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு புகழின் செயல் இருந்து வருகிறது. ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறது.
இவ்வளவு ஏன் ஷிவாங்கி மீது புகழ் காட்டும் அன்பிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இப்படி தனது பெயருக்கு ஏற்றவாறு புகழின் உச்சிக்கு சென்ற புகழ் தற்போது சொந்தமாக கார் வாங்கியுள்ளார். புகழ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், அவர் புதிதாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, ரூ.10க்கு கார் தொடச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனால், இப்போது, சொந்தமாக காரே வாங்கிவிட்டேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், தான் வாங்கிய காரை ரசிகர்களுக்கும் காண்பித்துள்ளார். இதே போன்று ரசிகர்களும் தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். புகழுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ், அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹரியின் 16ஆவது படமான இந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இது தவிர, சந்தானம் பட த்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 2348

18

1