விஜய்க்கு PAKKA FAREWELL… ரசிகர்களுக்கு COMPLETE MEALS.. ஜனநாயகன் அப்டேட்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2025, 6:56 pm

நடிகர் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்தார்.இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், 2026 தேர்தல் தான் இலக்கு என அறிவித்தார்.

மேலும் தனது சினிமா கேரியரை முடித்துக் கொள்வதாகவும், ஜனநாயகன் படம் தனது கடைசி படம் என அறிவித்தார். ஹெச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ஜனநாயகன் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே இயக்குநர் எச் வினோத் அண்மையில் பங்கேற்ற விழாவில், ஜனநாயகன் குறித்து பேசினார்,..

அதில் நடிகர் விஜய்க்கு ஜனநாயகன் படம் PAKKA FAREWELL ஆக இருக்கும் என்றும், ரசிகர்களுக்கு COMPLETE MEALS ஆக இந்த படம் இருக்கும், மாஸ், கமர்ஷியல், ஆக்ஷனை எதிர்பார்த்து படத்துக்க வாங்க என கூறியுள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!