நெட்டிசன்களின் ஆபாசமான கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த பாரதிகண்ணம்மா நடிகை – வைரலாகும் புகைப்படம்

4 February 2021, 4:48 pm
Quick Share

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாட கேள்விகளை கேட்குமாறு கூறியிருந்தார் பரினா ஆசாத். பலர் நல்ல விதமாக கேள்விகள் கேட்க, ஒரு சிலரோ ஆபாசமான கேள்விகளைக் கேட்டு எல்லை மீறி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பரீனா ஆசாத்.

ஒருவர் உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்க, அதற்கு பரினா, உங்க அக்கா அம்மா சைஸ் தான் என்று பதில் கூறியிருக்கிறார். இன்னொருவர் உங்களுக்கு எந்த வயதில் கன்னித்தன்மை போனது என்று கேட்க, அதற்கு, முதலில் உங்கள் அம்மாவிடம் கேட்டு என்னிடம் சொல்லுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறியிருக்கிறார். ஆபாசமாக கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக பரினா ஆசாத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

Views: - 19

0

0