கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை

1 February 2021, 1:30 pm
Quick Share

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தனது கணவரின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அப்லோட் செய்திருக்கிறார் பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் பரினா ஆசாத். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்கள் ஹிட் அடித்து வருகின்றது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா தொடருக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதில் வரும் கண்ணம்மா கேரக்டர் போலவே பல கேரக்டர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றன. அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் பரினா ஆசாத். அதில் வில்லத்தனமாக நடித்திருந்தாலும் அமோகமாக நடித்து வருவதால் மக்களின் ஆதரவு இருந்து வருகிறது.

இவருக்கு சமீபத்தில் தான் கல்யாணம் நடந்திருந்த நிலையில் சமூகவலைதளத்தில் மக்களிடம் கேள்விகளை கேட்குமாறு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இவரது கணவருடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுமாறு மக்கள் கேட்டிருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தான் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது

Views: - 1

0

0