மறைந்த மகள் குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட விஜய் ஆண்டனியின் மனைவி.. மனதை சுக்குநூறாக்கும் ட்வீட்..!

Author: Vignesh
9 October 2023, 7:11 pm

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

vijay antony - updatenews360.png d

அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது.

இந்நிலையில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்கு பல தடைகளை தாண்டி விஜய் ஆண்டனி கலந்து கொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது. மேலும், படங்களை தாண்டி விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடத்துவதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தனது மகள் குறித்து எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்கு தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகில் வைத்திருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உன்னை காட்டாமல் உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன். நீ இல்லாமல் வாழ முடியாது. பாப்பா அம்மாகிட்ட திரும்பி வந்துரு, லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கம் என்று பதிவிட்டிருந்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!