என் அம்மாவுக்கு அவள பிடிக்கல… மாமியார் கொடுமையை சகித்து கொள்ளும் மகாலட்சுமி – மௌனம் கலைத்த ரவீந்தர்!

Author: Shree
3 June 2023, 8:29 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.

இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையடுத்து ரவீந்தர் தனியாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்க்கை சோகமாகவும், கசப்பாகவும் இருப்பதாக பதிவுகளை போட்டிருந்தார். இதனால் அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள ரவீந்தர், உண்மையில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. என் மனைவி மீடியாவில் இருப்பதால் ஷூட்டிங் முடிந்து லேட்டா வருவாள். எவ்வளவு லேட்டாக வந்தாலும் எத்தனை மணியானாலும் எனக்காக சமைத்து கொடுப்பாள். அதையும் மீறி எங்களுக்குள் சில சண்டைகள் வந்துள்ளது.

அப்போதெல்லாம் நான் நடிப்பை நிறுத்தி விடவா என்று கேப்பாள். அதுமட்டும் அல்லாமல் என் அம்மாவிடம், மகாலட்சுமி மீது ஏரளமான வருத்தங்கள் வந்தாலும் மகாலட்சுமி இதுவரை என் அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் சொன்னதில்லை. அவள் பல பிரச்சனைகளை சகித்துக்கொண்டு என்னுடன் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று கூறியுள்ளார் ரவீந்தர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!