இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபலம்.. சிவகாமி தேவி மொமெண்ட் என பாராட்டித் தள்ளும் நெட்டிசன்ஸ்..!

Author: Vignesh
18 October 2022, 5:00 pm

பிரபல பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருபவர் சின்மயி. ஏஆர் ரஹ்மான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி, நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இரட்டை குழந்தைகள்

பாடகி சின்மயி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா ஷர்வாஸ் என்ற இரட்டை குழந்தைகளுக்கு தயானார் சின்மயி. ஒரே பிரசவத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சின்மயி, தான் தாயானதை சமூக வலைதள பக்கத்தின் மூலம் ட அறிவித்தார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

chinmayi-sripada-updatenews360

இதையடுத்து அவர் வாடகைத்தாய் மூலம்தான் குழந்தைகளை பெற்றெடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. அதுகுறித்து விளக்கம் அளித்த சின்மயி, தான் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெறவில்லை என்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சின்மயி, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

தாய் பாலூட்டும் சின்மயி

இந்நிலையில் சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதாவது தனது மகனுக்கும் மகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் சின்மயி. மேலும் உலகின் மிகச்சிறந்த விஷயம் இதுதான் என்றும் முதுகு மற்றும் தோள்கள் வித்தியாசமான குரல் கொண்டவை என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சிவகாமி தேவி மொமெண்ட்

சின்மயி ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ராஜமாதா சிவகாமி தேவி மொமெண்ட் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தான் கர்ப்பிணியாக இருந்த போட்டோவை ஷேர் செய்துள்ள சின்மயி, தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த ஒரே ஒரு செல்பி இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!