சென்சார் போர்டையே முகம் சுளிக்க வைத்த காட்சிகளை கொண்ட படங்கள்… இதுலயும் அந்த நடிகர்தான் ஃபர்ஸ்ட்!!

Author: Vignesh
22 December 2022, 5:45 pm
Amalapaul yashika - updatenews360
Quick Share

80, 90களில் தென்னிந்திய சினிமாவில் சென்சாருக்கு சென்று பல படங்கள் யு மற்றும் ஏ சான்றிதழை பெற்று வரும். அதிலும் யு/ஏ சான்றிதழ் அல்லது ஏ சான்றுதழ் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த காட்சிகளுக்கு கொடுப்பார்கள். அப்படி சென்சார் போடையே அதிரவைத்து முகம்சுளிக்க வைத்த முக்கிய படங்களை இந்த தெகுப்பில் பார்ப்போம்.

சிகப்பு ரோஜாக்கள்

KAMAL HAASAN_updatenews360

இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பதே கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் படம் தான். கமல் ஹாசன் படம் என்றாலே முத்த காட்சி கிளாமர் ஆட்டம் என குறைவைக்காமல் இருக்கும். பாரதிராஜா இயக்கத்தில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகிய படம் சிகப்பு ரோஜாக்கள். இதில், ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தில் முத்தக்காட்சிகள், காதல் மற்றும் நெருக்கமான காட்சிகள் என்று முகம் சுளிக்க வைத்து யு/ஏ சான்றிதழை பெற்று பார்ப்போரை சிக்குநூறாக்கியது.

sigappu roja kamal - updatenews360

உயிர்

2006ல் இயக்குனர் சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டவர்கள் நடித்த உயிர் படம் வெளியாகியது. உயிர் படத்தின் பாடல் காட்சிகள் கேட்பதற்கும், பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் படியாக அமைத்திருந்தது. உயிர் படத்தால் தான் ஸ்ரீகாந்த், சங்கீதாவின் கேரியர் முடிந்ததாகவும் பெரிதும் பேசப்பட்டது.

uyir - updatenews360

சிந்து சமவெளி

நடிகை அமலா பால் தமிழில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். சிந்து சமவெளி என்ற படம் மாமனார் மருமகள் கள்ளத்தொடர்பு குறித்த படம். சிந்து சமவெளி படம், பெரிய சர்ச்சையில் சிக்கியதோடு பார்ப்பவர்களையும் முகம் சுளிக்கவும் வைத்தது. இதன்பின் அமலா பாலுக்கு மார்க்கெட்டை நாசமாக்கியதும் இப்படம் தான்.

sindhu samaveli - updatenews360

மிருகம்

சாமி இயக்கத்தில், நடிகர் ஆதி, பத்மபிரியா நடித்து வெளியான படம் மிருகம், இப்படத்தில் படுமோசமான காட்சிகளை வைத்து இயக்குனர் முகம் சுளிக்க வைத்து இருப்பார். இந்த காட்சிகள் இருப்பதை நினைத்து நடிகை பத்மபிரியா விலகவும் நினைத்ததாகவும், ஆனால் அவரை அடித்து மிரட்டி இயக்குனர் சாமி நடிக்க வைத்ததாகவும் தகவல் பரவியது.

mirugam - updatenews360

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 2K கிட்ஸ்களின் அடல்ட் படமாக அச்சாணி போட்ட படம். கெளதம் கார்த்திக், யாஷிகா, வைபவி நடிப்பில் உருவாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பேய் படமாக ஆரம்பித்து முழுக்க ஆபாச காட்சிகளே அமைந்து முகம் சுளிக்க வைத்தது. இதன்பின் தான் அடல்ட் படங்கள் பெரிய அளவில் அதிகரிக்கத் துவங்கியது.

iruttu araiyil murattu kuthu - updatenews360
Views: - 661

1

1