இன்னும் தண்டனை அனுபவிக்கிறேன்… குழந்தையை நினைத்து கண்ணீர் விட்ட அர்னவ்!

Author: Shree
18 April 2023, 3:24 pm

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

Arnav Dhivya - Updatenews360

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்தார். எவ்வளவோ பேசியும் காதலை தெரிவித்தும் அர்னவ் புறிந்துக்கொண்டு திவ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அர்னவ் தற்போது சீரியல் நடிகை அன்ஷிதா என்பவரை காதலித்து வருகிறார். இதனால் கடுங்கோபமடைந்த திவ்யா அர்னவ் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அர்னவ் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என திவ்யா மனம் வருந்தி கூறி வந்தார்.

இதையடுத்து திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிஞ்சு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இந்த காத்திருப்பு நீண்டது ஆனால், மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது. என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பே தேவதை! என் அழகான பெண் குழந்தை. என பதிவிட்டிருந்தார். பின்னர் “குழந்தைகள் கடவுளின் கையிலிருந்து வீசப்பட்ட நட்சத்திர தூசிகள். நட்சத்திரம் பெற்றதற்கு பிறவியின் வேதனையை அறிந்த பெண் என பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இனிமேலாவது அர்னவ் சேர்ந்து வாழ்வரா? ஈகோவை விட்டு விட்டு குழந்தையை வந்து பாருங்கள் மனைவியுடன் மகிழ்சியாக வாழுங்கள். இப்படி ஒரு தேவதை பிறந்தும் மனம் மாறாத அரக்கனாக இருக்கும் அரன்வை பலர் திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பிறந்த மகளை குறித்து ,மனம் திறந்து பேசியுள்ள அரனவ், நான் காதலுக்காக என்னுடைய பெற்றோரை எதிர்த்து குடும்பத்தை எதிர்த்து தான் வெளியே வந்தேன். ஆனால் அந்த காதலால் நான் அதிகமாக வேதனையை அனுபவித்து விட்டேன். அதற்காக இப்ப வரைக்கும் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது.

நான் ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் தவிக்கிறேன். வீடியோ காலிலாவது குழந்தையை பார்க்க வேண்டும். ஆனால், இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அவர் எனக்கு அவ்வளவு வலிகளையும் வேதனையும் கொடுத்துவிட்டார் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

  • Sivakarthikeyan Surya Connection 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
  • Views: - 691

    3

    4