கட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

17 January 2021, 7:23 pm
Quick Share


சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கட்டில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இந்தப் படத்தைத் தொடர்ந்து யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, முப்பரிமாணம், காலக்கூத்து, சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கட்டில் மற்றும் சக்ரா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் இவி கணேஷ்பாபு இயக்கி நடிக்கும் படம் தான் இந்த கட்டில். இதில், சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை கட்டில் படம் வெளிப்படுத்துவதால், இந்திய மொழிகளிலும் உருவாவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், ஓவியர் ஷ்யாம், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் உள்பட பலர் கட்டில் படத்தில் நடித்துள்ளனர். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் நாற்காலியில் சிருஷ்டி டாங்கே அமர்ந்திருப்பது போன்றும், அவருக்கு அருகில் இவி கணேஷ்பாபு நிற்பது போன்றும் இருக்கும் போஸ்டரும், மற்றொரு போஸ்டரில் இவி கணேஷ்பாபு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்றும் அவருக்கு அருகில் சிருஷ்டி டாங்கே நிற்பது போன்றும் இருக்கும் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்தப் போஸ்டரை சிருஷ்டி டாங்கே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0