மீண்டும் டிவி சீரியலில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர்? வெளியான அசத்தல் புரொமோ வீடியோ!

Author: Prasad
8 July 2025, 1:16 pm

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் ஹிந்தி டிவி சீரியலில் நடிக்கவுள்ளது பேசுபொருளாகியுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சர்

2000 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிரபல ஹிந்தி டிவி சீரியலான “Kyunki Saas Bhi Kabhi Bahu Thi” மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ஸ்மிருதி இரானி. அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ஹிந்தி சீரீயல் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இதனிடையே 2001 ஆம் ஆண்டு ஜுபைன் இரானி என்பவரை திருமணம் செய்துகொண்டவர் 2003 ஆம் ஆண்டு பிஜேபியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

former union minister BJPSmriti Irani again acting in tv serial

அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு குஜராத் தொகுதியில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு போட்டியாக நின்று வெற்றிபெற்றார். இவர் மத்திய அமைச்சகத்தின் மனிதவள மேம்பாடு, தகவல் தொலைதொடர்பு, ஜவுளி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஆகிய துறைகளில் மத்திய அமைச்சராக செயல்பட்டவர். 

மீண்டும் டிவி சீரியல்

இவ்வாறு மத்திய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக செயல்பட்ட ஸ்மிருதி இரானி தற்போது மீண்டும் ஒரு டிவி சீரியலில் நடிக்கிறார். 2000 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒளிபரப்பப்பட்ட “Kyunki Saas Bhi Kabhi Bahu Thi” என்ற டிவி சீரியலின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 29 முதல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதன் முதல் பாகத்தில் துளசி விரானி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்மிருதி இரானி, இதன் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த நிலையில் சீரீயலின் புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் ஹிந்தி டிவி சீரியலில் நடிக்கவுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

  • mansoor ali khan directing a full movie in sanskrit language மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?
  • Leave a Reply