பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2025, 6:58 pm
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி படிக்கும் போதே காதல் வயப்பட்டனர். இருவரும் திரைத்துறையில் ஒன்றாக பயணித்த போது திருமணமும் செய்து கொண்டனர்.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இருவரும் பிரிந்தாலும் இசை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து பாடியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் இன்று, வழக்கு விசாரணையின் போது, குழந்தை தாயிடம் இருக்க வேண்டும் என நீதிபதி கூறினர்.
அதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல், ஜிவி பிரகாஷ், குழந்தை தாயிடம் வளர்வதுதான் நல்லது என கூறியுள்ளார். மேலும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பரஸ்பரமாக இருவரும் பிரிந்தாலும், இருவரும் நல்ல புரிதலோடு உள்ளனர் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிடடு வருகின்றனர்.
