பாட்டுப்பாடி ஓட்டு கேட்க போகும் கானா பாலா..! வெற்றி பெறுவாரா..?

Author: Rajesh
4 February 2022, 6:09 pm

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில், இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன இதனால் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.தான் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்புக்கையுடன் கானா பாலா கூறியுள்ளார்.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!