வைரமுத்து வாயை பொத்திட்டு இரு.. இளையராஜாவுக்காக பொங்கிய கங்கை அமரன்..!(Video)

Author: Vignesh
30 April 2024, 2:35 pm

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

ilayaraja 1

மேலும் படிக்க: கேரளாவுக்கு ஒரு ரேட்.. மத்தவங்களுக்கு ஒரு ரேட்.. அந்த வேலை செய்ய டீலிங் பேசும் ஹனி ரோஸ்..!

இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார்.

ilayaraja-updatenews360

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் தனக்கு சொந்தம் என்றும், பாடல் வரிகள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும், கோப்புரிமை கூறி வழக்குகளை கொடுத்து வருகிறார். இதுகுறித்து, விசாரித்த நீதிபதி பாடலாசிரியரும் பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று கேள்வியை கேட்டிருந்தார்.

Ilayaraja

மேலும் படிக்க: அந்த ஆசை இருக்கு ஆனால், Structure.. வெளிப்படையாக பேசிய நடிகை இந்துஜா..!

இந்நிலையில், வைரமுத்து இசை எவ்வளவு பெரியதோ அந்த அளவிற்கு மொழி பெரியது சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக திகழும். சந்தர்ப்பங்கள் ஏற்படும் இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அந்நியானி என்று சில கருத்தினை கூறியிருந்தார். வைரமுத்து பேசியதை அறிந்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேட்டி ஒன்றில் அவரை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். வைரமுத்து, இந்த அளவிற்கு உயர காரணம் நாங்கள் போட்ட பிச்சைதான் என்றும், இல்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Vairamuthu-Ilaiyaraaja-gangai-amaran 2

மேலும், நல்ல பாடலாசிரியர் தான் வைரமுத்து ஆனால், நல்ல மனிதர் கிடையாது. கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜாவை பற்றி தப்பாக பேசியிருக்க மாட்டார். இப்படி கொச்சைப்படுத்துவார்னு தெரியல, இளையராஜாவை பற்றி பேசாமல் வாயை பொத்திகிட்டு இரு உன் வேலை என்னவோ அதை பாரு என்று கண்டமேனிக்கு திட்டி கங்கை அமரன் பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!