ஐசரி கணேஷும் விஷ்ணு விஷாலும் இணையும் மாஸ் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்? சர்ப்ரைஸ் அப்டேட்…
Author: Prasad1 September 2025, 5:38 pm
மாஸ் ஹிட் திரைப்படம்
கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். ஐஸ்வர்யா லட்சுமியின் கெத்தான நடிப்பு ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. குறிப்பாக ஐஸ்வர்யா லட்சுமியின் சண்டை காட்சி ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கட்டா குஸ்தி 2
அதாவது “கட்டா குஸ்தி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தை ஐசரி கணேஷும் விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தையும் செல்லா அய்யாவுவே இயக்கவுள்ளார். ஷான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
விஷ்ணு விஷாலும் ஐசரி கணேஷும் சந்தித்து மிகவும் கலகலப்பாக பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். அந்த வீடியோ இதோ…
