பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்! 

Author: Prasad
30 April 2025, 1:07 pm

வாய்ஸ் ஓவர் இயக்குனர்

கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து அவர் கொடுக்கும் வாய்ஸ் ஓவர்களும் நினைவில் வரும். கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் வெகு காலமாக வெளிவராமலே இருக்கின்றது. இதற்கிடையில் அவர் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “DD Next Level” திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer

டூயட் பாடும் கௌதம் மேனன்

சந்தானம் கதாநாயகனாக நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த “DD Returns” திரைப்படத்தின் தொடர்சியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் “DD Next Level”. இத்திரைப்படத்தில் சந்தானத்துடன் கௌதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கையில் ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி திரைப்படமாக இது உருவாகியுள்ளது என தெரிய வருகிறது. 

இந்த டிரைலரில் கௌதம் மேனனும் யாஷிகா ஆனந்தும் “காக்க காக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலை அப்படியே பிரதிபலிப்பது போல் ஒரு காட்சி துணுக்கு இடம்பெற்றுள்ளது. அப்பாடலில் சூர்யா எப்படி பாடிக்கொண்டே கடற்கரையில் ஜோதிகாவை துரத்துவாரோ அதே போல் கௌதம் மேனன் பாடிக்கொண்டே யாஷிகாவை துரத்துகிறார். “DD Next Level” டிரைலரில் இடம்பெற்ற இந்த காட்சித் துணுக்கு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…
  • Leave a Reply