Adjustment செய்ய கூப்பிடுறானா பிடிச்சிருந்தா போ.. வெளிப்படையாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

Author: Vignesh
6 January 2024, 1:14 pm

சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. ஆனால், குறிப்பாக நடிகைகள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், நடிகைகள் பேட்டியில் கலந்து கொண்டால் போதுவாக கேட்கப்படும் கேள்வி அட்ஜெஸ்ட்மெண்ட் உங்களுக்கு நடந்து இருக்கா என்ற கேள்வி அனைத்து நடிகைகளின் பேட்டிகளிலும், முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு சீரியல் நடிகையிடன் இந்த கேள்வி கேட்கப்பட்டதால் சரமாரியாக சாடி இருக்கிறார். அதாவது அயலி மற்றும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் தான் அது.

நடிகை காயத்ரி கிருஷ்ணனின் சமீபத்திய பேட்டியொன்றில் தன்னிடம் கேட்கப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்து இருக்கிறார். அதில், பலபேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யறாங்க… வேண்டாம் என்று நினைக்கிறவங்க, அப்படியே விட்டுவிடுகிறார்கள். அவன் யாருன்னு சொல்லு, கூப்பிடுறானா உனக்கு பிடிச்சிருந்தா போ.. பிடிக்கலையா வேண்டாம்னு சொல்லிட்டு போ… படுத்துட்டு ஒத்துழைச்சிட்டு, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்னை கூப்பிட்டான்னு சொல்றது.

gayathri krishnan

உன்னை யாராவது கூப்பிட்டால், தைரியமா அவன் பெயரை சொல்ல வேண்டியது தானே அவ்வளவு துணிவிருந்தால் யார் செய்தது என்று சொல்லு. ஆள் யாரென்று தெரிஞ்சா மத்தவங்களும் அவங்ககிட்ட உஷாரா இருப்பாங்க உன் திறமைக்கு இல்லாத வாய்ப்பு உடலுக்கு கிடைக்கிறது. என்றால், அது எப்படியான வேலையாக இருக்கும் என்று புரிந்து கொண்டாலே போதும் என்று ஓபனாக பேசியுள்ளார்.

gayathri krishnan

வெளிப்படையாக நடிகை காயத்ரி இப்படி பேசி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சினிமாவில் நடிக்க அழகும் திறமையும், இருந்தால் போதாது அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளித்து உடன்பட்டால் மட்டுமே நட்சத்திரங்கள் ஜொலிக்க முடியும் என்ற நிலையை ஓபன் ஆக காயத்ரி பேசியிருப்பது பேசி உள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!