ஹீரோவைத் தொடர்ந்து ஜார்ஜியா சென்ற ஹீரோயின் பூஜா ஹெக்டே?

8 April 2021, 9:22 pm
Quick Share

விஜய் ஜார்ஜியா புறப்பட்டுச் சென்றதைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி 65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி சென்னையில் சன் டிவி ஸ்டூடியோவில் மிகவும் எளிமையான முறையில் தளபதி65 படத்தின் பூஜை நடந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் 2 நாட்கள் படப்பிடிப்பும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் வாக்களித்தார். இதையடுத்து, ஜார்ஜியாவில் நடக்க இருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் அங்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதோடு, ஜார்ஜியாவில் நடக்க இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வைரலனாது. இந்த நிலையில், விஜய்யைத் தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில், அவர் ஜார்ஜியா செல்லவில்லை. ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவே அவர் மும்பை விமான நிலையத்திலிருந்து, ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Views: - 5

1

1